‘பைரவா’ – அதிக விலைக்கு விற்கப்பட்ட யு.எஸ். உரிமை

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வர உள்ள இப்படத்தின் வியாபாரம் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

அமெரிக்காவில் படத்தைத் திரையிடும் உரிமையை 8கே மைல்ஸ் மீடியா, பி அன்ட் பி என்டர்டெயின்மென்ட், டென்ட்டுகொட்டா ஆகிய நிறுவனங்கள் கூட்டாக வாங்கியுள்ளன.

அவர்கள் சுமார் 5,00,000 யுஎஸ் டாலர், அதாவது 3 கோடிய 30 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினிகாந்த் அல்லாத ஒரு நடிகரின் படம் இந்த அளவிற்கு வியாபாரமாகியுள்ளது இதுவே முதல் முறை என்கிறார்கள்.

விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த ‘தெறி’ படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

படத்திற்குப் படம் விஜய்யின் வியாபார மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. அது ‘பைரவா’ படத்திலும் மேலும் அதிகமாக வாய்ப்புகள் அதிகம்.

 

Read Previous

பிறந்தநாள் கொண்டாட வேண்டாம், கமல்ஹாசன் வேண்டுகோள்

Read Next

ஸ்டார் கிரிக்கெட் கணக்கு வெளியிடப்படும், விஷால் அறிவிப்பு