இன்றைய இளம் ரசிகர்களை அதிகம் பெற்றுள்ள ஹீரோக்களில் ஒருவர் விஜய். வசூல் நாயகனாக ரஜினிகாந்திற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்.
அவர் நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த ‘தெறி’ படம் வசூலில் சாதனை படைத்தது. அந்தப் படத்திற்குப் பிறகு விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘பைரவா’.
பரதன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தின் டீசர் நேற்று இரவு 9.30 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது.
இன்னும் ஒரு நாளை கூட முடியாத நிலையில் ‘பைரவா’ டீசர் வழக்கம் போலவே சாதனைகளைப் படைத்து வருகிறது.
இதுவரை அந்த டீசரை 24 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
நேற்று டீசர் வெளியாவதற்கு முன்பிலிருந்தே சமூக வலைத்தளங்களில் டிரென்டிங்கில் வந்து கொண்டிருந்தது. திரையுலகத்தைச் சார்ந்த பலர் அந்த டீசர் பற்றி பதிவிடும் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து டிரென்டிங்கில் இருந்து வருகிறது.
‘பைரவா’ டீசருக்கு விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது.