‘கொடி, காஷ்மோரா’ – திரையுலகத்தினரைப் பற்றி ஒரு ஒளிப்பதிவாளரின் வருத்தம்

போட்டி, பொறாமை நிறைந்ததுதான் திரையுலகம் என்பது பலருக்கும் தெரியும்.

ஒரே நாளில் நான்கைந்து படங்கள் வெளி வந்தால், ஒரு படத்தைச் சார்ந்தவர்கள் மற்ற படங்களின் ‘ரிசல்ட்’ நன்றாக இருந்தால் கூட அவற்றைச் சரியில்லை என்றே சொல்வார்கள்.

காலம் காலமாக இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. சந்தர்ப்பங்களில் அந்த பொய்யான கருத்துக்கள் கூட வேகமாகப் பரவி சம்பந்தப்பட்ட நல்ல படங்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளத. அப்படிப்பட்டவர்களைப் பற்றி பிரபல ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் தோலுரித்துக் காட்டுகிறார்.

“அங்காடித் தெரு, கோ, வணக்கம் சென்னை, த்ரிஷா இல்லனா நயன்தாரா, அப்பா”, விரைவில் வெளிவர இருக்கும் ‘கத்தி சண்டை’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், “கொடி, காஷ்மோரா” படங்களைப் பற்றி தன் திரையுலக நண்பர்கள் சொன்னதை தன்னுடைய முகப்புத்தகத்தில் ஒரு பதிவாகப் போட்டிருக்கிறார்.

“கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய திரையுலக நண்பர்களிடம் ‘கொடி, காஷ்மோரா’ ஆகிய படங்களைப் பற்றி கேட்டு வந்தேன். யாருமே அந்தப் படங்களைப் பற்றி பாசிட்டிவ்வாக சொல்லவில்லை.

இன்று அந்த இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தேன், நன்றாக ரசிக்கவும் செய்தேன்.

பெரும்பாலான திரையுலகினர் முதல் நாள் முதல் காட்சியிலேயே படங்களைப் பார்த்துவிடுவார்கள். அந்தப் படங்கள் நன்றாகப் போக வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். அதே சமயம், அந்தப் படங்கள் நன்றாக போகாது என்பதை உறுதி செய்து கொள்வதற்காகப் பார்ப்பார்கள்.

ஒரு படத்தைப் பார்க்கும் போது அந்தப் படம் விஷுலாக என்னை வியக்க வைத்தால், அந்த ஒளிப்பதிவாளர் மீது சில சமயம் பொறாமை கொள்வேன்.  அவர்கள் உடனடியாக என்னுடைய போட்டியாளர்களாக வந்துவிடுவார்கள், ஆனால் எதிரிகளாக அல்ல.

அந்தப் போட்டியாளர்கள் என் அறிவை வளர்த்துக் கொள்ள உதவுவார்கள், இன்னும் முதிர்ச்சியடைய வைப்பார்கள்.

‘கொடி, காஷ்மோரா’ ஆகிய படங்கள் எனது நண்பர்களை என்டர்டெய்ன் செய்யவில்லை என்றால், இந்த உலகத்தில் வேறு எது அவர்களை ஈர்க்கும் எனத் தெரியவில்லை.

குறிப்பு – இயக்குனர்கள் கோகுல், துரை செந்தில் ஆகியோருடன் எனக்கு முழுமையாக எந்தத் தொடர்பும் இல்லை,” என அவருடைய பதிவில் தெரிவித்துள்ளார்.

Read Previous

Kadamban Official Teaser – Video

Read Next

‘திருட்டுப் பயலே 2’ படத்தில் அமலா பால்