‘கண்டேன் காதல் கொண்டேன்’ – ‘லிவிங் டு கெதர்’ கதை…

கிரியேட்டிவ் டீம்ஸ் ப்ரெசென்ட்ஸ் E.R ஆனந்தன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கண்டேன் காதல் கொண்டேன்’.

வெங்கட் G. சாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை நாகா, ஒளிப்பதிவு சுரேஷ் தேவன்.

சன் மியூசிக் தொகுப்பாளர் பாலா கதாநாயகனாகவும், அஷ்வினி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் மயில்சாமி, ‘பத்திரகாளி’ ராஜசேகர், ‘சூதுகவ்வும்’ ராதா, கே.எஸ்ஸ். பழனி, கிங்ஸ் A.மோகன் , கிச்சா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“நாயகன், நாயகி இருவரும் பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றனர். சிறிது காலம் தனியாக சேர்ந்து வாழலாம், இத்தைகைய வாழ்க்கை பிடித்தால் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

இதற்காக ஊரை விட்டு வெளியேறி தனியாக நவீன கால முறைப்படி வாழ்கின்றனர். ஆனால் பின்னர்தான் இவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலை கொண்டவர்கள் என்று தெரிய வருகிறது. அதே நேரம் இவர்களின் காதலால் இவர்களின் குடும்பங்களிலும் பிரச்சனை ஏற்படுகிறது.

மேலும் இவர்கள் இருவருக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வீடு திரும்புகின்றனர், வீட்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்களா ?, பின்னர் அவர்களின் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்லியிருக்கின்றோம். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது,” என்கிறார் இயக்குனர்.

Read Previous

சூர்யாவின் ‘சி 3’ – எதிர்பார்ப்பு என்ன ?

Read Next

தமிழிலும் வெளிவரும் ‘காஸி’