‘8 தோட்டாக்கள்’ படத்தின் சிறப்பு காட்சி தமிழ்த் திரையுலகப் பிரபலங்களுக்காக பிரத்யேகமாகதி திரையிட்டுக் காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்த அனைத்து பிரபலங்களும், ‘8 தோட்டாக்கள்’ படத்தின் தரமான கதையையையும், அசத்தலான நடிப்பையும், திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டியுள்ளனர்.
வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம். வெள்ளைப் பாண்டியன் மற்றும் பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் – ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தை, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார்.
புதுமுகம் வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்எஸ். பாஸ்கர், நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திங்களில் நடித்துள்ளனர்.
“எம் எஸ் பாஸ்கர் சாரின் தலை சிறந்த நடிப்பை, மனித உணர்வுகளால் நிறைந்து இருக்கும் இந்த 8 தோட்டாக்கள் படத்தில் காணலாம். வயதான பிறகு நம் பெற்றோர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி இருக்கின்றது 8 தோட்டாக்கள். நிச்சயமாக இந்த படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டும்,” என்கிறார் ‘துருவங்கள் 16’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன்.
“இயக்குனர் ஸ்ரீ கணேஷின் ஓர் உன்னதமான படைப்பு தான் இந்த 8 தோட்டாக்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் எல்லா நடிகர்களின் நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் இசையும் என்னை பெரிதளவில் கவர்ந்துவிட்டது. நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படமாக 8 தோட்டாக்கள் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு
“அனைவரையும் கவரக் கூடிய விதத்தில் இந்த 8 தோட்டாக்கள் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகிற்கு உத்வேகம் அளிக்க கூடிய ஒரு படமாக இந்த திரைப்படம் இருக்கும்,” என்று கூறுகிறார் இயக்குநர் சசி.
“நான் என் வாழ் நாளில் பார்த்த மிகச் சிறந்த படங்களுள் ஒன்று – 8 தோட்டாக்கள். இது முழுக்க முழுக்க இயக்குநர் ஸ்ரீ கணேஷன் 100 சதவீத உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் ஓர் தனித்துவமான அடையாளத்தை இந்த படம் பதிக்கும்,” என்கிறார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.
‘8 தோட்டாக்கள்’ படம் நாளை ஏப்ரல் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சக்திவேல் பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் வெளியிடுகிறார்.