ஷிவானி ராஜசேகர், அடுத்த வாரிசு நடிகை

‘புதுமைப் பெண்’ படத்தில் இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர் டாக்டர் ராஜசேகர்.

அதன் பின் தெலுங்குத் திரையுலகம் பக்கம் போன ராஜசேகர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக இடம் பிடித்தார்.

தமிழ், மற்றும் தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஜீவிதாவை டாக்டர் ராஜசேகர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஷிவானி, தற்போது மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

டாக்டருக்கு படித்துக் கொண்டே சினிமாவில் நடிக்கவும் தயாராகி விட்டார் ஷிவானி. விரைவில் தமிழ்ப் படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமாக உள்ளார் ஷிவானி.

தன் திரையுலகப் பிரவேசம் பற்றி அவர் கூறியதாவது,

“அப்பாவும் , அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே அறிமுகம் இருக்கு. சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம் , குச்சுப்புடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட் , கிடார் , வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன்.

நானும் தங்கை ஷிவாத்மிகாவும் யூடியுப் பார்த்து பாடி கொண்டே இருப்போம், இது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. நானும் தங்கையும் கிக் பாக்சிங் படித்து வருகிறோம். எனக்கு பிட்னஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அது எனக்கு ஒரு ‘அடிக்சன்’ மாதிரி.

நான் பொறந்தது மட்டும் தான் தமிழ் நாடு வளர்ந்தது ஹைதராபாத்தில் தான். உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள். அவர்களோடு பேசும் போது தமிழில் தான் பேசுவோம். நான் 3வது வருடம் மருத்துவம் படித்து வருகிறேன்.

நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த ‘3’ படத்தைப் பார்த்து எமோஷனல் ஆகி அழுது இருக்கிறேன். விஷாலை எனக்கும் மிகவும் பிடிக்கும் அவர் மேன்லியாக இருப்பார். அவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட. நடிகர் விஜய் சேதுபதி செம ஆக்டர். அவரை பிடிக்கும். அவர் நடிக்கும் படம் சென்சிபிலாக இருக்கும். அப்பா தான் என்னுடைய ஆள் டைம் ஹீரோ , அப்பா அம்மா சேர்ந்து நடித்த படங்களை ஒண்ணு விடாமல் பார்த்திருக்கிறேன்.

டாக்டருக்குப் படித்துக் கொண்டே நடிப்பிலும் நல்ல பெயர் வாங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது,” என்கிறார் ஷிவானி.

Read Previous

நான் மட்டுமே கதை கேட்கிறேன் – கௌதம் கார்த்திக்

Read Next

79 நாட்களில் படமான பிரம்மாண்ட ‘கௌதமி புத்ர சாதகர்ணி’