செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இந்த மாதம் 30ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் படம், பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் – யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணையும் படம் இது.
பேய்க் கதைதான் என்றாலும் இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு கதையை இயக்குனர் செல்வராகவன் படமாக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மூலம் மீண்டும் மறக்க முடியாத ஒரு படத்தைத்தான் கொடுக்கப் போகிறார் என்கிறார்கள் படக்குழுவினர்.