‘விஐபி 2’ – ஆகஸ்ட்டில் வெளியீடு

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’.

இப்படம் அடுத்த வாரம் ஜுலை 28ம் தேதியன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், சென்சார் பெறுவதில் கொஞ்சம் தாமதம் ஆனதால் படத்தின் வெளியீட்டை தற்போது ஆகஸ்ட் மாதம் தள்ளி வைத்துவிட்டனர்.

இது பற்றி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு கூறுகையில்,

“சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விஐபி 2’ படத்தின் வெளியீட்டை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறோம் என திரைப்பட ரசிகர்களுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

படத்திற்கு தற்போது சென்சார் முடிந்து அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Read Previous

ஜுலை 28ம் தேதி ‘நிபுணன்’ வெளியீடு

Read Next

‘பிக் பாஸ்’, ஓவியாக்கு சிம்பு ஆதரவு, கொட்டிய லைக்ஸ்