தெலுங்கிலும் ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவி

மலையாளத்தில் வந்த ‘பிரேமம்’ படம் மூலம் கேரள ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்தவர் சாய் பல்லவி.

மலர் டீச்சர் கதாபாத்திரத்தைக் காதலிக்காதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அந்தப் படத்தில் அசத்தியிருந்தார்.

தமிழில் இப்போதுதான் ‘கரு’ படத்தின் மூலம் நுழைந்திருக்கிறார். தெலுங்கில் சாய் பல்லவி அறிமுகமான ‘ஃபிடா’ படம் நேற்று வெளியானது.

அந்தப் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டார் சாய் பல்லவி. தெலுங்கானா பெண்ணாக நடித்துள்ள சாய் பல்லவியின் நடிப்பை விமர்சகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

தெலுங்கில் படம் பெரிய வெற்றி பெறும் என ஒரே நாளில் சொல்லிவிட்டார்கள்.

தெலுங்கில் ஒரு சிறப்பான படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதற்கு அனைவருக்கும் நன்றி சொல்லியிருக்கிறார் சாய் பல்லவி.

Read Previous

‘பிக் பாஸ்’, ஓவியாக்கு சிம்பு ஆதரவு, கொட்டிய லைக்ஸ்

Read Next

எந்த நேரத்திலும் – விமர்சனம்