சிம்புவின் அடுத்த படம் தரும் அதிர்ச்சி

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து சிம்புவும், அவரது ரசிகர்களும் மீண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

அதற்குள் மற்றுமொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் சிம்பு. இந்த அதிர்ச்சி அவருடைய அடுத்த படம் பற்றியது.

‘‘பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை, ரெஸ்ட் ரூம் பயன்படுத்துவது, கூல்டிரிங்ஸ், பாப்கார்ன் வாங்குவது ஆகியவற்றை படம் பார்ப்பதற்கு முன்பே செய்துவிடுங்கள். சாட்சியில்லாததற்கு சாட்சியாக இருங்கள்,” என்று தன் அடுத்த படம் எப்படியிருக்கப் போகிறது என்பது குறித்து வித்தியாசமான அதிர்ச்சித் தகவலைக் கொடுத்திருக்கிறார் சிம்பு.

‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம், ஏழு முறை வீழ்ந்தாலும் எட்டாவது முறை எழுந்து நில்,” என்கிறார் சிம்பு.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் தலைப்பு, மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Read Previous

‘ஃபெப்ஸி’ ஸ்டிரைக், வளரும் விவகாரம்…

Read Next

‘நிபுணன்’ படத்திற்கு அதிகமாகும் வரவேற்பு