துல்கர் சல்மான் ஜோடியாக நான்கு நாயகிகள்

பிஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘சோலோ’ படத்தின் முதல் பார்வை கடந்த வாரம் வெளியானது.

தமிழில் நேரடியாக இந்தப் படம் உருவாகிறது, ‘டப்பிங்’ அல்ல, என்பதை அழுத்தம், திருத்தமாகக் கூறுகிறார் படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

நான்கு கதாபாத்திரங்களில் துல்கர் நடிக்கும் இந்தப் படத்தில் நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர் துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Read Previous

‘நிபுணன்’ படத்திற்கு அதிகமாகும் வரவேற்பு

Read Next

Theru Naaigal Official Teaser