சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விவேகம்’.
இப்படத்தின் தணிக்கை முடிவடைந்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
ஆகஸ்ட் 24ம் தேதி வியாழக் கிழமையன்று ‘விவேகம்’ வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 25, வெள்ளிக் கிழமை, வினாயக சதுர்த்தி என்பதால் அன்று விடுமுறை, அடுத்து, சனி, ஞாயிற்றுக் கிழமை என விடுமுறை வருவதால் 24ம் தேதியன்று படத்தை வெளியிடுகிறார்கள்.
அஜித் சென்டிமென்ட்டாக அவர் படம் சம்பந்தப்பட்ட வெளியீடுகளை வியாழக் கிழமைகளில் மட்டுமே வைத்துக் கொள்வார். அது ‘விவேகம்’ படத்திலும் தொடர்கிறது.