‘எமோஜி’ என்பது இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் பலரும் பயன்படுத்துவது.
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ‘மகிழ்ச்சி’ என்பதை வெளிப்படுத்த ‘ 🙂 ’ என்ற சிரிக்கும் பொம்மை போன்ற உருவத்தைப் பதிவிடுவதுதான் ‘எமோஜ என அழைக்கப்படுகிறது.
‘கபாலி’ பட வெளியீட்டின் போது ‘வாட்ஸ்-அப்’பில் ரஜினிகாந்தின் கபாலி தோற்ற எமோஜி வெளியிடப்பட்டது.
ஆனால், முதல் முறையாக டிவிட்டரில் ‘மெர்சல்’ படத்திற்காக விஜய்யின் ‘மெர்சல் எமோஜி’ ஒன்றை டிவிட்டர் இந்தியா இன்று மதியம் வெளியிட்டது.
“ஒரு தமிழ்ப் படத்திற்காக முதல் முறையாக எமோஜி ஒன்றை வெளியிடுவது குறித்து உற்சாகம் அடைகிறோம். #Mersal
என்று ஆங்கிலத்தில் # ஹேஷ்டேக்குடன் டைப் செய்தால் ‘மெர்சல் எமோஜி’ டிவிட்டரில் வரும்,” என்று டிவிட்டர் இந்தியா சார்பாக பதிவிட்டுள்ளார்கள்.
அது மட்டுமல்லாமல் ‘மெர்சல்’ என்ற வார்த்தையுடன் மெர்சல் சம்பந்தமாக பதிவிடும் மேலும் சில வார்த்தைகளுக்கும் ‘மெர்சல் எமோஜி’ வரும்.
உதாரணத்திற்கு…கீழே உள்ள படம்..
‘மெர்சல்’ திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பல புதுப்புது உத்திகளைக் கையாண்டு வருகிறது.
இது விஜய் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்…
