‘ஓவியா ஆர்மி’ – ‘ஒன் மேன் ஆர்மி’, சண்டை வருமா ?

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சுவாரசியமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

கமல்ஹாசன்தான் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து நிகழ்ச்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அவருக்கு அவரே ‘டாஸ்க்’ கொடுத்துக் கொள்கிறார். கடந்த வாரம் பழைய போட்டியாளர்களுடன் பேச மாட்டேன் என அவரே ஒரு டாஸ்க் வைத்துக் கொண்டார். இந்த வாரம் என்ன டாஸ்க்கைத் தேர்ந்தெடுப்பாரோ தெரியாது.

இதனிடையே, கடந்த ஞாயிறு அன்று வெளியில் வந்த காயத்ரி ரகுராம் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆவதற்கு முன்பே அன்றைய தின புரோமோவை அவருடைய டிவிட்டரில் ரிடிவீட் செய்து அவர் வெளியில் வந்ததை உலகுக்கு அறிவித்தார். அதை உடனே ‘டெலிட்’ செய்தது தனிக் கதை.

ஒரு நாள் மட்டும்தான் காயத்ரி அமைதியாக இருந்தார். நேற்றே, அவருடைய டிவிட்டரில் முழு வீச்சில் இறங்கிவிட்டார்.

இப்போதுதான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் பல வீடியோக்களையும், ஓவியாவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள பெயரும், புகழும் அவருக்குத் தெரிய வந்திருக்கிறது.

ஓவியாவின் புகழ் ‘ஓவியா ஆர்மி’ என அழைக்கப்பட்டவர்களால் வேகமாகப் பரவியது. ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையிலும் இன்றும் ஓவியாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் காயத்ரிக்கு எப்படியிருந்திருக்குமோ, நேற்று அவருடைய டிவிட்டரில் ‘நான் ஒன் மேன் ஆர்மி’ என்று பதிவிட்டிருந்தார்.

அந்த டிவிட்டர் பதிவை மட்டும் இதுவரை 2000 பேர் லைக் செய்திருக்கிறார்கள். வெறும் 376 பேர் மட்டும் ரிடிவீட் செய்திருக்கிறார்கள். ஆனால், 4600 பேர் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

ஆனால், பெரும்பாலான கமெண்ட்டுகள் ஓவியாவிற்கு ஆதரவான கமெண்ட்டுகளாகவும், காயத்ரியை எதிர்க்கும் கமெண்ட்டுகளாகவுமே உள்ளன.

அதன் பின் காயத்ரியின் டிவிட்டரில் தத்துவங்களைப் பொழியும் குறிப்பாக தவறு செய்யும் மனிதர்களைப் பற்றிய பதிவுகளே வந்து கொண்டிருக்கின்றன.

ஓவியா ஆர்மியும், ஒன் மேன் ஆர்மியும் தொடர்ந்து மோதிக் கொள்ளாமல் இருந்தால் சரி.

வீட்டிற்குள் அவ்வளவு பிரச்சனைகளிலும் ‘ஒன் மேன் ஆர்மி’ ஆக இருந்து சமாளித்தது ஓவியாதான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஓவியா அப்படி ஒன் மேன் ஆர்மியாக இருந்ததுதான் ஓவியா ஆர்மி வரக் காரணம் என்பது காயத்ரிக்குப் புரியுமா…?

Read Previous

‘விவேகம்’ – அதிகமாகும் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு

Read Next

இம்சை அரசன் 24ம் புலிகேசி – மோஷன் போஸ்டர்