‘விவேகம்’ – அமெரிக்க பிரிமியர் காட்சிகளில் அதிக வசூல்

‘விவேகம்’ படம் அமெரிக்காவில் தமிழில் சுமார் 170 தியேட்டர்களிலும், தெலுங்கில் சுமார் 130 தியேட்டர்களிலும் என மொத்தமாக 300 தியேட்டர்கள் வரையில் வெளியானது.

வெளியீட்டிற்கு முந்தைய நாளில் நடைபெற்ற பிரிமியர் காட்சிகளில் 2,14,176 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. 157 தியேட்டர்களில் கிடைத்த வசூல் இது.

இதன் மூலம் 2 லட்சம் யுஎஸ் டாலர்களுக்கும் அதிகமான பிரிமியர் வசூலைப் பெற்ற ‘கபாலி, தெறி, 24’ ஆகிய படங்களுடன் ‘விவேகம்’ படமும் இணைந்துள்ளது.

இருந்தாலும் பிரிமியர் காட்சி வசூலில் விஜய் நடித்த ‘தெறி’ வசூலான 2,14,688 யுஎஸ் டாலர் வசூலை முறியடிக்கவில்லை. இன்னும் சில தியேட்டர்களின் வசூல் விவரம் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்துவிட்டால் ‘தெறி’ வசூலை ‘விவேகம்’ முறியடித்துவிடும் என்கிறார்கள்.

இருந்தாலும் அஜித் நடித்துள்ள படங்களிலேயே அமெரிக்க பிரிமியரில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை ‘விவேகம்’ தற்போது பெற்றுள்ளது.

Read Previous

‘விவேகம்’ – முதல் நாள் வசூல் எவ்வளவு ?

Read Next

யுவன் இசையில் முதல் முறை பாடிய அனிருத்