மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் பாடல் படப்பிடிப்பு ருமேனியாவில் நடந்து வருகிறது.
இதற்காக மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் ருமேனியாவிற்குச் சென்றுள்ளனர். இந்தப் பாடல் காட்சியுடன் ‘ஸ்பைடர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கு வருகிறது.
செப்டம்பர் மாதம் 27ம் தேதி இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளனர்.
மகேஷ் பாபு நேரடியாக நடிக்கும் முதல் தமிழ்ப் படம் என்பதால் அவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா செப்டம்பர் மாதம் 9ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகத்தின் முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் சிலர் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
தெலுங்கில் உள்ள முன்னணி வசூல் நாயகர்களில் ஒருவராக இருக்கும் மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படம் ‘விவேகம்’ வெளியீட்டிற்குப் பின்னரும், ‘மெர்சல்’ வெளியீட்டிற்கு முன்னவரும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.