இன்று மாலை ‘மெர்சல் – மாச்சோ’ பாடல் வரிகள் வீடியோ

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியாகியுள்ள ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் ஆகியுள்ளன.

ஏற்கெனவே, இப்படத்தின் மூன்று பாடல்களான ‘ஆளப் போறான் தமிழன், நீதானே, மெர்சல் அரசன்’ ஆகிய பாடல்கள் யு டியூபிலும், இசை இணையதளங்களிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

யு டியுபில் ‘ஆளப் போறான் தமிழன்…’ பாடலுக்கு 92 லட்சம் பார்வைகளும், ‘நீதானே…’ பாடலுக்கு 12 லட்சம் பார்வைகளும், ‘மெர்சல் அரசன்’ பாடலுக்கு 22 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. பல இசை இணையதளங்களில் அதிகம் முறை கேட்கப்பட்ட பாடலாகவும் இருக்கின்றன.

‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள நான்கு பாடல்களில் மூன்று பாடல்களின் லிரிக் வீடியோக்கள், அதாவது பாடல் வரிகள் வீடியோக்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.

இன்று மாலை 6 மணிக்கு யு டியுபில் நான்காவது பாடலான ‘மாச்சோ…என்னாச்சோ…’ பாடலின் பாடல் வரிகள் வீடியோ வெளியாக உள்ளது.

‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு மிகப் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

‘மெர்சல்’ படத்தின் பாடல் வரிகள் வீடியோக்கள்…

ஆளப் போறான் தமிழன்…

நீதானே…

மெர்சல் அரசன்…

Read Previous

விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியைக் கெடுத்த ‘புரியாத புதிர்’

Read Next

150 கோடி வசூலைக் கடந்ததா ‘விவேகம்’ ?