விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க அட்லீ இயக்கத்தில் தீபாவளியன்று வெளிவந்த ‘மெர்சல்’ படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு வசூலைப் பொறுத்தவரையில் குறைந்த நாட்களில், அதாவது 12 நாட்களில், 100 கோடி ரூபாயைக் கடந்துள்ளது புதிய சாதனை என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியைக் கடந்த படமாக இதுவரை ‘எந்திரன்’ படம் மட்டுமே இருந்தது. டப்பிங் படமான ‘பாகுபலி 2’ படமும் 100 கோடியைக் கடந்துள்ளது.
இப்போது தமிழ்ப் படமாக ‘எந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ‘மெர்சல்’ படமும் இடம் பிடித்துள்ளது. ‘எந்திரன்’ படத்தின் தமிழ்நாடு மொத்த வசூல் சுமார் 110 கோடி ரூபாய். அந்தத் தொகையையும் அடுத்த சில நாட்களில் ‘மெர்சல்’ கடந்து விடும். அதோடு, உலக வசூலும் 200 கோடி ரூபாயைக் கடக்கும் வாய்ப்பும் உள்ளது.
படத்திற்காக சர்ச்சையை ஏற்படுத்திய அரசியல்வாதிகளுக்குத்தான் ‘மெர்சல்’ படக் குழுவினர் நன்றி சொல்ல வேண்டும்.