ஹார்வர்டு தமிழ் இருக்கை, ஏ.ஆர்.ரகுமான் 25 ஆயிரம் டாலர் நன்கொடை

அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை பல தமிழ் அறிஞர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர்.

தமிழ் இருக்கை அமைவதற்கான மொத்த செலவான 39 கோடியில் இதுவரை 30 கோடி வரை வசூல் ஆகியுள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் அதற்காக 10 கோடி ரூபாயை வழங்க உத்தரவிட்டுள்ளது. இருந்தும் இன்னமும் 10 கோடி ரூபாய் அதற்காகத் திரட்டப்பட வேண்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கனடாவில் ஏ.ஆர்.ரகுமான், அவர் நடத்திய இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில் 25000 அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் 16 லட்சம் ரூபாய்)  ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கான குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் விஜய் ஜானகிராமனிடம் ஏ.ஆர்.ரகுமான் இந்தத் தொகையை வழங்கினார்.

தமிழ் நடிகர்களில் சூர்யர், விஷால், ஜி.வி.பிரகாஷ்குமார், கருணாஸ் உள்ளிட்டவர்கள் இதற்கான நன்கொடையை வழங்கியுள்ளார்கள்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவர்கள் இதற்கான நன்கொடையை வழங்க வேண்டும் என்ற எண்ணமில்லையா என சமூக வலைத்தளங்களில் தமிழ் ஆர்வலர்கள் கேட்டு வருகிறார்கள்.

Read Previous

ஹார்வர்டு தமிழ் இருக்கை, கருணாஸ் 1 லட்சம் நன்கொடை

Read Next

தமிழ்நாட்டில் 100 கோடி வசூலித்த ‘மெர்சல்’

Most Popular