‘காலா’ பொங்கல் வெளியீடு அல்ல, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் படம் ‘2.0’.

இப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 25, 2018 அன்று வெளிவராது என நேற்று திடீரென ஒரு தகவல் பரவியது. படத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அது பற்றி இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

இதனிடையே, ரஜினிகாந்த் நடித்து வரும் மற்றொரு படமான ‘காலா’ படம் பொங்கல் வெளியீடாக வெளிவரலாம் என சிலர் தகவலைப் பரப்பிவிட்டனர். ஆனால், ‘காலா’ படம் ஜனவரி மாதத்திலோ, பொங்கலுக்கோ வெளியாகவில்லை என ‘காலா’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் நிறுவனத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘காலா’ படம் கோடை விடுமுறையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

தமிழ்நாட்டில் 100 கோடி வசூலித்த ‘மெர்சல்’

Read Next

200 கோடியைக் கடந்தது ‘மெர்சல்’ ?