தமிழ்க் கொலையை நிறுத்துவாரா கமல்ஹாசன் ?

தமிழ்நாட்டில் விரைவில் அரசியலில் இறங்கும் நடிகர் என கமல்ஹாசன் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார். அதற்கேற்றபடி அவருடைய செயல்களும் இருந்து வருகின்றன.

கடந்த பல மாதங்களாகவே டிவிட்டரில் மட்டுமே அவருடைய கருத்துக்களையும், விமர்சனங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கடந்த வாரம் களத்தில் இறங்கி எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிகளுக்குச் சென்று அங்கு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற பலத்த ஆவலில் இருக்கும் கமல்ஹாசன் தொடர்ந்து டிவிட்டரில் தமிழை தப்பும் தவறுமாகவே எழுதி வருகிறார். பல முறை அவருடைய டிவிட்டர் கமெண்ட் பகுதிக்குச் சென்று பலர் சுட்டிக் காட்டியும் அவர் தொடர்ந்து தமிழை தவறுவதலாகவே பதிவிட்டு வருகிறார். இப்படி பிரபலங்கள் தமிழைத் தவறுதலாக எழுதுவதால் இன்றைய தலைமுறையும் அதையே தெரியாமல் தொடர வேண்டிய சூழல் ஏற்படும்.

கமல்ஹாசன் இன்று இரண்டு முறை டிவீட் செய்துள்ளார். இரண்டு முறையும் அவருடைய தமிழில் உள்ள குறைகளைப் பாருங்கள்.

தமிழ்நாட்டைக் காக்கத் துடிக்கும் கமல்ஹாசனிடமிருந்து முதலில் யாராவது தமிழைக் காப்பாற்ற வேண்டும்.

Read Previous

‘திருட்டுப்பயலே 2’ நவம்பர் 30ம் தேதி வெளியீடு

Read Next

ஒரே ஒரு பாடல் காட்சியில் ஆடிய ‘பிக் பாஸ்’ சினேகன்