‘திருட்டுப்பயலே 2’ நவம்பர் 30ம் தேதி வெளியீடு

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’.

படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி உலகமெங்கும் ‘திருட்டுப்பயலே 2’ வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் முதன் முதலில் தயாரித்த படமான சுசி கணேசனின் ‘திருட்டுப் பயலே’ படத்தின் முதல் பாகம் அப்போது வெற்றிகரமான ஓடியது-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்துடன் சுசிகணேசன் மீண்டும் இணைந்து ‘திருட்டுப் பயலே’ படத்தை உருவாக்கியிருக்கிறார்.

Read Previous

‘திருட்டுப்பயலே 2’ நவம்பர் 30ம் தேதி வெளியீடு

Read Next

தமிழ்க் கொலையை நிறுத்துவாரா கமல்ஹாசன் ?

Most Popular