வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’.
இந்தப் படத்தில் நபிநந்தி, கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள்.
ஒரு பாடல் காட்சிக்கு பூனம் கவுர் நடனமாடியுள்ளார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார்,கே.டி.ஸ்.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, THR.ராகா மாறன், அற்புதன் விஜய் , ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்காக ஒரே ஒரு பாடல் காட்சியில் ‘பிக் பாஸ்’ புகழ் சினேகன் ஆடிப் பாடி நடித்துக் கொடுத்துள்ளார்.
இது பற்றி படத்தின் இயக்குனர் விஜயசேகரன் கூறுகையில்,
“மரியா மனோகர் இசையில், சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சியானது மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.
‘எதுவும் தப்பில்லை, எவனும் புத்தனில்லை’ என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களைக் குறி வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி இது. இந்தப் பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்துப் படமாக்கப்பட்டது,” என்கிறார் இயக்குனர்.