நிவின் பாலி நடித்துள்ள தமிழ்ப் படம் ‘ரிச்சி’, டிசம்பர் 8ம் தேதி வெளியீடு

‘பிரேமம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மூலம் மொழி எல்லையைத் தாண்டி தமிழ்நாட்டிலும் தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர் நிவின் பாலி.

அவர் தமிழில் நேரடியாக நடித்து வரும் படம் ‘ரிச்சி’. இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடித்துள்ளார். கதாநாயகியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீஸர் பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

டிசம்பர் 8ஆம் தேதி ‘ரிச்சி’ படத்தை வெளியிட உள்ளார்கள்.

Read Previous

விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

Read Next

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’