தனது முதல் படமான ‘அப்பா வேணாம்பா’ என்கிற படத்தில், குடி குடியைக் கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகரும், இயக்குனருமான வெங்கட்ரமணன்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்.
கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப் படம் முழுக்க, கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.
இயக்குனர் வெங்கரமணன், இசையமைப்பாளர் வி.கே.கண்ணன், ஒளிப்பதிவாளர் செல்வம், படத் தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணன் என முதல் பட கூட்டணியே இதிலும் தொடர்கின்றனர்.
இந்தப் படத்தில் என்ன சிறப்பம்சம் என்றால் சினிமாவை சாராத, அதே சமயம் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பத்து பேர், வெங்கட்ரமணனுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் துவங்குகிறார்கள் . மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.