தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்தவர் யார் ?

2017ம் ஆண்டு கடந்த  சில ஆண்டுகளைப் போலவே, வெளிவரும் படங்களின் எண்ணிக்கையில் 200ஐத் தாண்டப் போவது உறுதி.

இதுவரையிலும் 190க்கும் அதிகமான படங்கள் வந்துள்ள நிலையில், கடைசி இரண்டு வாரங்களில் எப்படியும் 10 படங்களாவது வந்து 200ஐத் தாண்ட வைத்துவிடும்.

இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்தவர்களில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகிய இருவருக்கும்தான் போட்டி.

விஜய் சேதுபதி நடித்து, “கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ‘விக்ரம் வேதா’ படம் பெரிய வெற்றியையும், ‘கவண், கருப்பன்’ சுமாரான வெற்றியையும் பெற்றன. ‘புரியாத புதிர்’ படம் தோல்வியடைந்தது.

கௌதம் கார்த்தி நடித்து, “முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, இந்திரஜித்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ‘ஹரஹர மகாதேவகி’ வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், கௌதம் கார்த்திக்கின் இமேஜைப் பதம் பார்த்தது. ‘ரங்கூன், இவன் தந்திரன், இந்திரஜித்’ ஆகிய படங்கள் வரவேற்பு பெற்ற அளவிற்கு வசூலிக்கவில்லை. ‘முத்துராமலிங்கம்’ வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

கௌதம் கார்த்திக் நடித்த 5 படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்து அவரை ரசிகர்களிடம் கவனிக்க வைத்தன. வரும் ஆண்டில் பெரிய வெற்றியைக் கொடுத்தால் அவரும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெறலாம்.

Read Previous

‘இதயனே….’ பாடலின் இனிமையைச் சொல்லும் மதன் கார்க்கி

Read Next

சிவகார்த்திகேயன்-ஐ ‘ஸ்டார்’ ஆகத்தான் பார்ப்பேன் – எடிட்டிர் ரூபன்

Most Popular