பல வெற்றிப் படங்களின் படத் தொகுப்பாளர் ஆகப் பணியாற்றியவர் ரூபன். சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்திற்கும் அவர்தான் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.
‘வேலைக்காரன்’ படத்தின் புரோமாக்கள் மூலம் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டவர் படம் பற்றி பேசியதாவது,
”சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர். ‘ரெமோ’ படத்திற்குப் பிறகு அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். ஒரு எடிட்டராக அவரை நான் ஒரு ஸ்டாராகத்தான் பார்ப்பேன். இந்த கண்ணோட்டம் எனது பணியை மேலும் சிறப்பாக்க உதவுகிறது. அவரது ரசிகர்கள் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய அவரது ரசிகர்களை பின்பற்றத் தொடங்கினேன். இது எனது எடிட்டிங்கிற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதனை கதையோடு அழாகாக இணைப்பது ஒரு சவாலான காரியமே.
‘வேலைக்காரன்’ போன்ற நட்சத்திரப் பட்டாளம் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்ட படத்தை எடிட் செய்வது எளிதான காரியமல்ல. கதைக்குள் பல பரிமாணங்கள் இருப்பதால் இந்த படம் சவாலாகவே இருந்தது,” என்கிறார் ரூபன்.