விஜய் தொலைக்காட்சியில் டிசம்பர் 25 முதல், ‘ நினைக்க தெரிந்த மனமே’ என்ற புதிய மெகா தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தக் கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா, வசதியும் அன்பும் கொண்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். இருந்தும் தீபாவிற்கு தான் யார் என்பதும், தன்னுடைய கடந்த கால வாழ்க்கை என்ன என்பதுவும் நியாபகத்தில் இல்லை. அது அவரை உறுத்திக் கொண்டு இருக்கின்றது.
அடிக்கடி தீபாவுக்கு சில காட்சிகள், நினைவுகள் போல வந்து செல்லும். அப்போது அவருக்கு பதட்டம் ஏற்படும் . அதைத் தவிர்த்து அவர் தன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஆனால் அது நீடிக்கவில்லை. ஒருநாள் அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. அவள் உண்மை என்று நினைத்த வாழ்க்கை, பொய் என்று தோன்றியது.
அவரின் கடந்த கால குடும்பத்தினர் யார்? தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன?
இந்தத் தொடரில் ரெட்டை வால் குருவி புகழ், அஸ்வின் அரவிந்தாக நடிக்கிறார். நடிகை ஐஸ்வர்யா இந்தத் தொடர் கதையின், மூலம் தமிழ்த் தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைக்கிறார். இவர் கன்னடத் தொலைக்காட்சியில், பிரபலமானவர்.
மேலும் நடிகை உமா ரியாஸ் அவர்கள், இந்தத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்தத் தொடர்கதையின் இயக்குனர் அழகர் மற்றும் ஒளிப்பதிவாளர் கோபால். இந்தத் தொடர்கதை முற்றிலும் மாறுப்பட்ட ஒரு குடும்பத் தொடராக இருக்கும்.