பொங்கல் போட்டியில் பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’

‘அறம்’ படத்தைத் தொடர்ந்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்திக்கும் படம் ‘குலேபகாவலி’.

இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

காமெடி த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் சுமார் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் மட்டும் 28 நாட்களும், வசனக் காட்சிகள் சுமார் 45 நாட்களும் நடைபெற்றுள்ள.

இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை அறிமுக ஒளிப்பதிவாளர் R. S. ஆனந்தகுமார் செய்துள்ளார். படத்தொகுப்பு விஜய் வேலுக்குட்டி. தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை மிகப் பிரம்மாண்டமாக அமைத்துள்ளார். பாடல்கள் பா. விஜய், கு. கார்த்திக், கோ சேஷா.

தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் ஜானி இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். கலை இயக்குனர் K.கதிரின் கலை வண்ணத்தில் படத்திற்கு மேலும் பிரம்மாண்டத்தை கூட்டியுள்ளார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்யாண் இயக்கியுள்ளார். நிர்வாகத் தயாரிப்பு சௌந்தர் பைரவி. தயாரிப்பு மேற்பார்வை P.சந்துரு.

Read Previous

‘வஞ்சகர் உலகம்’, கேங்ஸ்டர் உலக த்ரில்லர் படம்

Read Next

‘கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்கய்யா’, 100 நாள் ஓட வைக்க திட்டம்