அட்லீ இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து கடந்த வருடம் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘மெர்சல்’.
இப்படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்கள், உலக அளவில் படத்தை மிக எளிதாகக் கொண்டு சேர்த்தன. வெளிநாட்டில் பல நாடுகளில் ‘மெர்சல்’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
விஜய் நடிக்கும் படங்களுக்கு பொதுவாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். ‘மெர்சல்’ படத்திற்கு அதிக இன்னும் அதிமாகவே கிடைத்தது.
இப்போது, ‘மெர்சல்’ படமும், விஜய்யும் வெளிநாடு விருதுப் போட்டி ஒன்றிற்கும் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ்த் திரையுலகத்திற்குக் கிடைத்துள்ள பெருமைதான்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள தேசிய திரைப்பட அகாடமி 2018ம் ஆண்டு விருதுக்கான சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் ‘மெர்சல்’ படம் தேர்வாகியுள்ளது. அந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள விஜய், சிறந்த துணை நடிகருக்கான போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான இணையதள வாக்குப்பதிவு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. வரும் 20ம் தேதி வரை வாக்களிக்கலாம். மார்ச் மாதம் 28ம் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்கள் விவரம் அறிவிக்கப்படும்.
தேசிய திரைப்பட அகாடமி விருது போட்டியில் ‘மெர்சல்’ படத்திற்கும் விஜய்க்கும் வாக்களிக்க… http://www.nationalfilmawards.org/voting/ இங்கே க்ளிக் செய்யவும்…