‘காலா’ ஏப்ரல் ரிலீஸ், நாளை அறிவிப்பு ?

தனுஷின் உண்டர் பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காலா’.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக பரபரப்பாக செய்திகள் வெளியாகி வந்தன. அது உண்மைதான் என இன்று கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான ‘2.0’ படம்தான் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால் அன்றைய தினம் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றக் கூடாதென அதே தினத்தில் ‘காலா’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்தும், “2.0 வேலைகள் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதால் 2 நாட்களில் எந்தப் படம் வெளியாகும் என தெரிய வரும்,” என்று கூறியிருக்கிறார்.

அதனால், நாளை ‘காலா’ வெளியீட்டுத் தேதியைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

‘காலா’ ஏப்ரலில் வருவதால் அன்றைய தினம் வருவதாக அறிவிக்கப்பட்ட படங்களின் வெளியீட்டுத் தேதிகளில் தற்போது மாற்றம் வரலாம்.

Read Previous

‘கத்தி’ எதுக்கு ?, சொல்ல வரும் ‘சவரக்கத்தி’…

Read Next

சவரக்கத்தி விமர்சனம்