தமிழ்த் திரையுலகில் மிகப் பொருத்தமான ஜோடியாக இருந்தவர்கள் மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர். இருவரும் சேர்ந்து நடித்த 28 படங்களில் 24 படங்கள் சூப்பர் ஹிட் படங்கள்.
இருவருமே அரசியலில் இறங்கி முதல்வர் பதவியில் அமர்ந்து, பின்னர் மறைந்தவர்கள்.
எம்ஜிஆர் அரசியலில் இறங்குவதற்கு முன்பு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அவரால் அந்தப் படத்தை எடுக்க முடியவில்லை.
பல வருடங்கள் கழித்து அந்தப் படத்தை தற்போது அனிமேஷன் முறையில் தயாரிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கான துவக்க விழா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள கடந்த மாதம் நடந்தது.
எம்ஜிஆர் உடன் ஜோடியாக நடிக்க ஜெயலலிதா தான் பொருத்தமாக இருப்பார் என அவரை அனிமேஷனில் உருவாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அறிவிக்கப்பட்டது.
படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
அருள்மூர்த்தி இயக்கும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.
இப்படத்தை அடுத்த ஆண்டு எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ம் தேதி வெளியிட உள்ளார்கள்.