குளியலறையில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் ?

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ம் தேதி சனிக் கிழமை இரவு துபாயில் மரணமடைந்தார். அவருடைய மரணம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நிகழ்ந்ததாகவே கருதப்பட்டு வந்தது.

இதனிடையே, ‘கல்ப் நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் தடய அறிவியல் துறை அறிக்கையில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கியதால் மரணமடைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆல்கஹால் அவருடைய உடலில் கலந்திருந்தது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவிக்கு திடீரென ஏற்பட்ட மயக்கத்தினால் தடுமாறி, குளியல் டப்-பில் விழுந்திருக்கிறார் என்கிறார்கள்.

தடயவியல் துறையின் அறிக்கை ஸ்ரீதேவி குடும்பத்தாருக்கும், தூதரக அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Read Previous

எனக்கு ‘கரு’ மிக முக்கியமான படம் – இயக்குனர் விஜய்

Read Next

அனிமேஷன் படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா