பாடகர் ஆன விஜய் சேதுபதி

‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி.

தற்போது தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகரும் இவரே.

வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

இப்போது பாடகர் ஆகவும் மாறியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவின் உறவினரான ஹரிகிருஷ்ணன் பாஸ்கர் நாயகனாக அறிமுகமாக, சீனிவாஸ் இயக்கும் ‘பேய் பசி’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இது பற்றிய தகவலை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவே வெளியிட்டுள்ளார்.

Read Previous

நாளை ஸ்ரீதேவி-யின் இறுதிச் சடங்கு, குடும்பத்தினர் அறிவிப்பு

Read Next

அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்