நாளை ஸ்ரீதேவி-யின் இறுதிச் சடங்கு, குடும்பத்தினர் அறிவிப்பு

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை 24ம் தேதியன்று துபாயில் திடீரென மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய உடலை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான அனுமதிகள் இன்றுதான் கிடைத்தது.

ஸ்ரீதேவியின் உடல் துபாயிலிருந்து புறப்பட்டுள்ளது, இன்னும் சில மணி நேரங்களில் மும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தார் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பார்வைக்கு அவரது உடல் வைக்கப்பட்டு, பின்னர் மாலை 3.30 மணி அளயில் தகனம் செய்யப்படுகிறது.

இரங்கல் மற்றும் இறுதி மரியாதை

28 பிப்ரவரி புதன் கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை

மும்பை, அந்தேரி வெஸ்ட், செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்

இறுதிச் சடங்கு நிகழ்வு

28 பிப்ரவரி புதன் கிழமை, மதியம் 3.30 மணி முதல்

மும்பை விலி பார்லே மேற்கு, விலி பார்லே சேவ சமாஜ் கிரிமடோரியம் மற்றும் இந்து சிமிட்ரி

இரண்டு இடங்களிலும் மீடியாக்களுக்கு வாசல் வரை மட்டுமே அனுமதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Read Previous

ஸ்ரீதேவி உடலுக்கு துபாய் அரசு அனுமதி சான்றிதழ்

Read Next

பாடகர் ஆன விஜய் சேதுபதி