தமிழ்த் திரையுலகத்தில் டாப் 3 நடிகர்கள் என்றால் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரை மட்டுமே சொல்ல முடியும். மற்றவர்கள் அவர்களுக்கு அடுத்துதான் இருக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட மூன்று நடிகர்களின் டீசர்கள், டிரைலர்கள் எது வந்தாலும் அவை யு டியூபில் கலக்கலான சாதனையை ஏற்படுத்திவிடும்.
அந்த வரிசையில் நேற்று வெளியான ‘காலா’ டீசர் பெரும் சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நள்ளிரவில் திடீரென வெளியானதால் ‘மெர்சல்’ சாதனையை முறியடித்து ‘காலா’ டீசரால் நம்பர் 1 இடத்திற்கு முன்னேற முடியவில்லை.
24 மணி நேர முடிவில் காலா டீசர் 87 லட்சம் பார்வைகளையும், 3,29,000 லைக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளன. லைக்குகளின் எண்ணிக்கையில் அது ‘மெர்சல்’ டீசரின் பாதி அளவிற்குதான் பெற்றிருக்கிறது. பார்வைகள் எண்ணிக்கையில் 25 லட்சம் பார்வைகள் பின் தங்கிவிட்டது.
பகலில் ‘காலா’ டீசரை வெளியிட்டிருந்தால் அது ‘மெர்சல்’ டீசரின் சாதனையை முறியடித்திருக்கலாம். ‘மெர்சல்’ சாதனையை ‘காலா’ டீசரால் முறியடிக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள். அடுத்து அவர்கள் ‘2.0’ டீசர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
24 மணி நேரத்தில் சாதனை புரிந்த டீசர்கள் விவரம்…
பார்வைகள்
மெர்சல் – 1 கோடியே 12 லட்சம்
காலா – 87 லட்சம்
விவேகம் – 61 லட்சம்
கபாலி – 51 லட்சம்
தானா சேர்ந்த கூட்டம் – 41 லட்சம்
லைக்குகள்
மெர்சல் – 72,8,000
காலா – 3,29,000
தானா சேர்ந்த கூட்டம் – 3,08,000
விவேகம் – 2,85,000
கபாலி – 2,32,000
காலா – டீசர்
மெர்சல் – டீசர்
விவேகம் – டீசர்