கலர்ஸ் டிவியில் ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’

தமிழில் புதிதாக ஒளிபரப்பைத் துவக்கியுள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பல்வேறு விதமான சுவையான, சுவாரசியமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

படிப்பைத் தாண்டி வியக்கத்தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்ற ஒரு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை ப்ளூ ஐஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுதாகர் தயாரித்து வழங்குகிறார்.

நிகழ்ச்சி பற்றி அவர் கூறியதாவது,

”தொலைக்காட்சியை கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தர வேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது.

குழந்தைகளிடம் படிப்பைத் தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்பது எங்களது எண்ணம். திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. இந்த ஷோவிற்கு நாங்கள் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறேன்.

குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும் ‘மதிப்பெண் கொடுப்பது மற்றும் நீக்குதல்’ என்ற விஷயமே இந்த ஷோவில் கிடையாது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9 மணி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்குகிறார். அபரிமிதமான திறமைகளைக் கொண்ட குழந்தைகளோடு கலகலப்பான உரையாடல்களை அவர் மேற் கொள்வார். அவர்களின் அழகான குழந்தைத்தன்மையை அவர் வெளிக் கொண்டுவருவார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகள் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சிரியப்படவைப்பார்கள் என்பது உறுதி. இதைத் தவிர அதிரடி சிறப்பு விருந்தினர்கள், குழந்தைகளின் திறமைகளை அலச வல்லுனர்களின் கருத்து, ஆகியவை இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாகும்.

அபாரமான திறமைகளைக் கண்டெடுத்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்காக எங்களது அணி முழு நேரம் உழைத்துவருகிறது,” என்கிறார் சுதாகர்.

Read Previous

‘விஸ்வாசம்’ ரிலீஸ் அடுத்த ஆண்டு ?

Read Next

காலா, மெர்சல், விவேகம் டீசர்கள் சாதனை என்ன ?

Most Popular