‘வர்மா’ – நேபாளம் படப்பிடிப்பு நிறைவு

தெலுங்கில் கடந்த வருடம் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’.

இப்படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நேபாளத்தில் ஆரம்பமானது. அங்கு சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கினார்கள். ஒரு வாரத்திற்குள் அந்தக் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டன.

இதையடுத்து படக்குழுவினர் நேபாளத்திலிருந்து சென்னை திரும்புகிறார்கள். அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கு நடைபெற உள்ளது.

இன்னும் படத்தின் நாயகி யார், இசையமைப்பாளர் யார் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அந்த அறிவிப்புகள் வெளியாகலாம்.

Read Previous

2.0 டீசரில் மாற்றம், ஷங்கர் முடிவு

Read Next

படப்பிடிப்புகளும் ரத்து, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு