படப்பிடிப்புகளும் ரத்து, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தியேட்டர்களில் டிஜிட்டல் திரையிடலை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே கட்டண விவகாரம் தொடர்பாக மோதல் இருந்து வந்தது.

டிஜிட்டல் நிறுவனங்கள் அவர்களது கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1 தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடத்தி வருகிறது.

தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கியூப் மற்றும் மற்ற பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு ஏற்படாததால் வருகிற மார்ச் 16ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று FEFSI அமைப்பின் ஒப்புதலோடு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் படி சினிமாவின் நலன் கருதி அனைத்து படங்களின் படப்பிடிப்பும் வருகிற 16ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும். மற்ற போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடைபெறாது என்றும்ம தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் நேரடியாக மோத விரும்பாத தியேட்டர்கள் சங்கத்தினர் மார்ச் 16ம் தேதி முதல் தமிழக அரசை எதிர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர்களை மூட உள்ளனர்.

இதனால், தமிழ்த் திரையுலகத்தில் நடைபெறும் போராட்டம் மிகத் தீவிரம் அடைந்துள்ளது.

Read Previous

‘வர்மா’ – நேபாளம் படப்பிடிப்பு நிறைவு

Read Next

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ கதை என்ன ?