தமிழில் வெளியாகும் அல்லு அர்ஜுன் படம்

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படம் தமிழில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்கு படங்கள் இதுவரை தமிழில் டப்பிங் ஆகி வெளியானதே இல்லை. நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் அவருடைய தெலுங்குப் படங்களை தமிழில் டப்பிங் செய்ய அவர் அனுமதித்ததே இல்லை. முதல் முறையாக இந்தப் படத்தை டப்பிங் செய்ய சம்மதித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இந்தப் படத்தில் சரத் குமார், அர்ஜுன் இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி, ஆகியோருடன் நதியா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

வி.வம்சி இயக்கத்தில், ராஜீவ் ரவி ஒளிப்பதிவு இயக்கத்தில், விஷால்- சேகர் இரட்டையர் இசை அமைக்க, ராஜீவன் கலை இயக்கத்தில், பா.விஜய் வசனம் மற்றும் பாடல்கள் இயற்ற , கே.நாகபாபு, பி.வாசு இணை தயாரிப்பில், லகடப்பாடி ஸ்ரீஷா ஸ்ரீதர் ராமலெக்ஷ்மி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படத்தைத் தயாரிக்கிறார்.

Read Previous

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ – ஒரு அரசியல் காமெடி கலாட்டா

Read Next

‘நானும் ரவுடிதான்’ ஸ்டைலில் நயன்தாரா