‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ – ஒரு அரசியல் காமெடி கலாட்டா

தமிழ் சினிமாவில் வினியோகத் துறையில் உள்ள ஆரா சினிமாஸ் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டது. ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். பசுபதி, ரோபோ ஷங்கர், ‘மொட்ட’ ராஜேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

புதுமுகம் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நையாண்டியாகக் கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில் , எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் , மாட்லி ப்ளூஸ் இசையில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ உருவாகிவருகிறது.

”ஒரு படத்தை, கொடுடுத்த பட்ஜெட்டில், குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்துக் கொடுப்பதே ஒரு இயக்குனரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் ஆரா சினிமாஸ் காவியா மகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும் என உறுதியாகக் கூறுவேன்,” என்கிறார் இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன்.

Read Previous

கொன்கொனா சென் ஷர்மா-வுக்கு கொல்லப்புடி சீனிவாஸ் விருது

Read Next

தமிழில் வெளியாகும் அல்லு அர்ஜுன் படம்