தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில், தமிழ் பேசத் தெரிந்த, பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையான தோற்றத்தில் இருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழ்த் திரையுலகத்தில் அவருக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார்.
தமிழ்ப் படங்களில் இழந்த பெயரை மீண்டும் பெற வேண்டும் என உடற்பயிற்சி செய்து தன் எடையை நன்றாகக் குறைத்துள்ளார் . அவருடைய ஸ்லிம் ஆன புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமா பக்கம் போனவர் இப்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் வருடத்திற்கு, ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்துள்ளார் .
2018ம் வருடத்தில் அஞ்சலி நடித்து நான்கு படங்கள் வெளிவரலாம். ‘காளி, பேரன்பு, காண்பது பொய், நாடோடிகள் 2’. இவற்றில் ‘காளி’ முதலில் வெளிவர உள்ளது. சசிகுமார் ஜோடியாக நடிக்கும் ‘நாடோடிகள் 2’ சமீபத்தில்தான் ஆரம்பமானது.
தமிழில் விட்ட இடத்தைப் பிடிப்பாரா அஞ்சலி ?.