அரசியல்வாதியாக மாறியுள்ள கமல்ஹாசன் இன்னும் நடிகராகவும் அவருடைய பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அதனால்தான், ஒரே மாதிரியான தோற்றத்தில் அவரால் இன்னும் தொடர முடியாமல் இருக்கிறது. படத்திற்குப் படம் விதவிதமான தோற்றங்களில் வருபவர், அரசியல்வாதியான பிறகு ஒரே தோற்றத்தில் இருக்க வேண்டும் என்ற விதிகளும் இல்லை. இருந்தாலும், சிலரின் எதிர்பார்ப்பும் அப்படி இருக்கும்.
இன்று மக்கள் நீதி மய்யம் அலுவலகம் வந்த கமல்ஹாசனின் தோற்றம் கம்பீரமான மீசையுடன் அமைந்திருந்தது. ‘தேவர் மகன், விருமாண்டி’ ஸ்டைலில் அமைந்துள்ள அந்த மீசை இன்னும் முழுமையாக வளரவில்லை 🙂 , ஒரு 50 சதவீதம்தான் வளர்ந்திருக்கும்.
இருப்பினும் கமல்ஹாசனின் தோற்றத்தை இன்று சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக ஷேர் செய்து அதையும் ஒரு விவாதப் பொருளாக ஆக்கிவிட்டார்கள் நமது வலைதளப் பயன்பாட்டாளர்கள்.
கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கான தோற்றமாக அது இருக்கலாம் என்கிறார்கள்.