ஸ்ரேயா திருமணம், எப்போது அறிவிப்பார் ?

‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படத்தின் மூலம் முதன் முறையாக தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா. அதற்குப்பின் ‘மழை, சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, உத்தமபுத்திரன், அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது திரைக்கு வராத ‘நரகாசூரன்’ படத்திலும் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மார்ச் 18ம் தேதி ஸ்ரோயவுக்கும் அவருடைய ரஷ்ய காதலர் ஆன்ட்ரி கொஸ்சீவ்க்கும் நடைபெறவிருந்த திருமணம், மார்ச் 11ம் தேதியன்றே ஸ்ரேயாவின் மும்பை வீட்டில் நடந்து முடிந்துவிட்டது. இருவரது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண பிஸியில்தான் அவர் சமூக வலைத்தளம் மற்றும் டிவிட்டரில், கடந்த பத்து நாட்களாக எந்தப் பதிவும் செய்யவில்லை.

ஸ்ரேயா எப்போது அவரது திருமண அறிவிப்பை வெளியிடுவார்?..

Read Previous

தமிழில் கவனம் செலுத்தும் அஞ்சலி

Read Next

விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ புதிய தொடர்