பாவம் அஜித், விஜய் – நடிகர் சித்தார்த் கிண்டல்

தமிழ்த் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கும் போது விஜய் படத்திற்கு மட்டும் படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி அளித்தது பற்றி திரையுலகத்தில் உள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நடிகர் சித்தார்த் அது பற்றி இன்று காலையில் ஒரு டிவீட்டைப் பதிவிட்டிருந்தார். அதில் அனைவரும் சமம், எதற்கு ஒருவருக்கு மட்டும் அனுமதி, அப்படியென்றால் அனைவருக்கும் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்.

அதன் பின் அவருடைய டிவிட்டர் டைம்லைனில் விஜய், அஜித் ரசிகர்களை அவருக்கு பல்வேறு விதமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டார்கள்.

அதற்கும் அஞ்சாமல் அவர்களைத் திட்டியே மேலும் ஒரு டிவீட் போட்டார் சித்தார்த். அதில்,

“தமிழ் சினிமாவிற்கு ஒரு பைசா கூட பிரயோஜனமில்லாதது எது என்பதைத் தெரிந்து கொள்ள என்னுடைய டைம்லைனில் உள்ள கடைசி 100 பதில்களைப் படியுங்கள். மோசமான வார்த்தைகள், தேவையில்லாத விஷயம், சம்பந்தமில்லாத கோபம், அனைவரது பெயரையும், நேரத்தையும் கெடுப்பதெற்கென்றே இருக்கும் வேலையில்லாத இரண்டு கூட்டம். பாவம் , விஜய் – அஜித்,” என அவர்களுடைய ரசிகர்களுக்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

Read Previous

ஸ்ரேயா திருமணப் புகைப்படமும் ‘லீக்’

Read Next

சினிமா ஸ்டிரைக் – ரஜினி பேச்சு தந்த அதிர்ச்சி