2000ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஹே ராம்’ படம் தமிழ் ,ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டது. இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன் இயக்கி நடித்த இப்படத்தில் அவருடன் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, அதுல் குல்கர்னி, நஸ்ருதீன் ஷா, சௌரப் சுக்லா ஆகிய பல ஹிந்தி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
சுதந்திரத்திற்கு முந்தைய கதையான இப்படம், விமர்சன ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் சாதாரண ரசிகர்களுக்கு புரியவில்லை. ஹே ராம் படத்தை 18 வருடங்கள் கழித்து மீண்டும் ‘ரீமேக்’ செய்யும் உரிமையை ஷாரூக்கான் பெற்றுள்ளார்.
கமல்ஹாசன் தன்னிடம் பணம் இல்லை என்பதால், கைகடிகாரம் ஒன்றைத்தான் சம்பளமாக ஷாரூக்கானுக்கு வழங்கியுள்ளார்.
ஷாரூக்கான் ‘ஹேராம்’ படத்தை எப்போது ரீமேக் செய்யப் போகிறார் என்பது பற்றி தகவல்கள் விரைவில் வெளியாகும்.