தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையான ஸ்ரேயா, 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.
மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், தோரணை, குட்டி, ரவுத்திரம், சிவாஜி ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அரவிந்த் சாமியுடன் நரகாசுரன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
ரஷியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவுடன் ஸ்ரேயாவுக்கு திருமணம் ஆனதால், அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.
சினிமாவை விட்டு விலகி, விரைவில் கணவருடன் ரஷியாவில் குடிபெயற ஸ்ரேயா தயாராகி வருகிறார்.