‘சீறும் புலிகள்’, பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம்

ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அப்படத்திற்கு ‘சீறும் புலிகள்’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தை ‘லைட்மேன், உனக்குள் நான், நீலம்’ ஆகீய படங்களை இயக்கிய வெங்கடேஷ்குமார் இயக்க உள்ளார்.

படத்தில் பிரபகாரன் ஆக நடிக்கப் போவது யார், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ் சினிமாவில் இலங்கை இனப் போரைப் பற்றி இதுவரை வெளிவந்த படங்கள் அனைத்துமே அமெச்சூரிஷ் ஆகத்தான் இருந்துள்ளன. இந்தப் படமாவது சர்வதேசத் தரத்தில் உருவாகட்டும்.

Read Previous

‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஜுலை 6ம் தேதி ரிலீஸ்

Read Next

வடிவேலு கேட்கும் 2 கோடி, ஷங்கர் தருவாரா ?