‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஜுலை 6ம் தேதி ரிலீஸ்

திரு இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில் கௌதம் கார்த்திக், ரெஜினா, கார்த்திக், வரலட்சமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

இப்படத்திற்கு யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தை ஜுலை 6ம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

“மிஸ்டர் சந்திரமௌலி படம் துவங்கிய நாள் முதல் மிகவும் அனைத்தும் சிறப்பாகவே நடந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திய விதம், படத் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது என அனைத்துமே சிறப்பாக நடந்தன.

இதற்கெல்லாம் பின்னால் இருந்த வித்தைக்காரர் தயாரிப்பாளர் தனஞ்செயன். படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் இருந்து வெளியீடு வரை அவர் காட்டிய நம்பிக்கை, சலுகை அபரிமிதமானது. மிஸ்டர் சந்திரமௌலியில் நாங்கள் வழங்கியிருக்கும் பொழுதுபோக்கு மற்றும் எமோஷன் பார்வையாளர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும், அவர்கள் செலவழிக்க உள்ள நேரத்தை படம் நிச்சயம் வீணாக்காது.

பிஸியான நடிகர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்தது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. கௌதம் கார்த்திக், வரலட்சுமி, ரெஜினா, சதீஷ் என அனைவருமே நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும், அவர்கள் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக மட்டுமே இந்தப் படத்தை குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும் படத்திற்கு கூடுதலாக சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றன,” என்கிறார் இயக்குனர் திரு.

Read Previous

காலா – புதிய டிரைலர் – வீடியோ

Read Next

‘சீறும் புலிகள்’, பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம்