தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த முதல் வெற்றிப் படம் ‘ரஜினி முருகன்’.
அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’ படத்தில் இணைந்து நடித்தார்.
இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சீமராஜா’ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.
நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, சதீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
‘சீமராஜா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் இந்த வருட விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ம் தேதி வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.